ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 11 (விச்வரூப தர்சன யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 10

கீதார்த்த ஸங்க்ரஹம் பதினைந்தாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினொன்றாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினொன்றாம் அத்தியாயத்தில், பகவானைக் காண்பதற்கான தெய்வீகக் கண்கள் (அர்ஜுனனுக்கு பகவானால்) கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், பக்தி ஒன்றே அந்த பகவானைப் பார்த்தல், அடைதல் போன்றவற்றுக்கு ஒரே வழி என்றும் கூறப்படுகிறது.” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

அர்ஜுன உவாச
மத³னுக்³ரஹாய பரமம் கு³ஹ்யமத்⁴யாத்மஸஞ்ஜ்ஞிதம் |
யத்த்வயோக்தம் வசஸ்தேன மோஹோ(அ)யம் விக³தோ மம ||

அர்ஜுனன் கூறினான், “உன்னால் கருணையோடு அளிக்கப்பட்ட, (முதல் ஆறு அத்யாயங்களில்), ஆத்மாவைப் பற்றிய மிகவும் ரஹஸ்யமான அறிவுரைகளால், இந்த ஆத்ம விஷயங்கள் தொடர்பான எனது குழப்பம் முற்றிலும் நீக்கப்பட்டது”.

குறிப்பு: முதல் 3 ச்லோகங்களில், அர்ஜுனன் க்ருஷ்ணன் மீதான பக்தியை வெளிப்படுத்துகிறான்.

ச்லோகம் 4

மன்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |
யோகே³ஶ்வர ததோ மே த்வம் த³ர்ஶயாத்மானமவ்யயம் ||

திருக்கல்யாண குணங்களை உடையவனே! ஸர்வேச்வரனே! உன் வடிவத்தை என்னால் பார்க்க முடியும் என்று நீ நினைத்தால், அந்த எண்ணத்தின் காரணமாக மட்டுமே, தயவுசெய்து உன் வடிவத்தை எனக்கு முழுமையாகக் காட்டுவாயாக.

ச்லோகம் 5

ஶ்ரீப⁴க³வானுவாச
பஶ்ய மே பார்த்த² ரூபாணி ஶதஶோ(அ)த² ஸஹஸ்ரஶ꞉ |
நானாவிதா⁴னி தி³வ்யானி நானாவர்ணாக்ருதீனி ச ||

க்ருஷ்ணனாகிய பகவான் விளக்கினான் – குந்தியின் மகனே! எல்லா இடத்திலும் இருக்கும் எனது வடிவங்களைப் பார்; மேலும், பல வண்ணங்கள் மற்றும் நிலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மற்றும் பல வகைகளில் உள்ள அற்புதமான என் வடிவங்களைப் பார்.

6வது மற்றும் 7வது ச்லோகங்களில், பகவான் தனது விச்வரூபத்தில் என்ன தெரியும் என்பதை விளக்குகிறான்.

ச்லோகம் 8

ந து மாம் ஶக்ஷ்யஸே த்³ரஷ்டுமனேனைவ ஸ்வசக்ஷுஷா |
தி³வ்யம் த³தா³மி தே சக்ஷு꞉ பஶ்ய மே யோக³மைஶ்வரம் ||

உன்னுடைய இந்தக் கண்களால் என்னுடைய விச்வரூபத்தை உன்னால் பார்க்க முடியாததால், இந்த ஊனக் கண்களிலிருந்து வேறுபட்ட தெய்வீகக் கண்களை நான் உனக்குத் தருகிறேன். அந்தக் கண்களால், ஈச்வரனான என்னிடத்தில் இருக்கும் திருக்கல்யாண குணங்களையும் செல்வங்களையும் ப்ரத்யேகமாகப் பார்க்கலாம்.

9வது ச்லோகம் முதல் 14வது ச்லோகம் வரை, பகவான் அர்ஜுனனுக்குக் காட்டிய விச்வரூபம் ஸஞ்சயனால் வர்ணிக்கப்படுகிறது.

15வது ச்லோகத்தில், அர்ஜுனன் பகவானிடம் “உன்னுடைய விச்வரூபத்தில் அனைத்து தேவதைகளையும் பார்க்கிறேன்” என்று கூறுகிறான்.

16 மற்றும் 17வது ச்லோகங்களில், அர்ஜுனன் பகவானின் விச்வரூபத்தின் அம்சங்களை விளக்குகிறான்.

18வது ச்லோகத்தில், அர்ஜுனன் பகவானின் மேன்மையை விளக்குகிறான்.

19வது ச்லோகத்தில், அர்ஜுனன் விச்வரூபத்தைக் கண்டு தனக்கு ஏற்பட்ட பயத்தை வெளிப்படுத்தத் தொடங்குகிறான்

20வது ச்லோகத்தில், விச்வரூபத்தைக் கண்டு அனைவரும் பயந்து விட்டார்கள் என்பதை விளக்குகிறான்.

21வது ச்லோகத்தில், தேவர்களும் ரிஷிகளும் க்ருஷ்ணனை எப்படி ஸ்தோத்ரம் செய்கிறார்கள் என்பதை விளக்குகிறான்.

22வது ச்லோகத்தில், அனைத்து தேவர்களும் க்ருஷ்ணனை எப்படி ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் என்பதை விளக்குகிறான்

23, 24 மற்றும் 25வது ச்லோகங்களில், மீண்டும் அவன் விச்வரூபத்தைப் பார்த்து அடைந்த பயம் மற்றும் அஸௌகர்யத்தை விளக்குகிறான்.

26 முதல் 30வது ச்லோகங்கள் வரை, அவன் துர்யோதனன் மற்றும் பலரும் பகவனால் உட்கொள்ளப்படுவதை விளக்குகிறான்

31வது ச்லோகத்தில், அவன் பகவானிடம் இத்தகைய கொடூரமான வடிவத்தைக் கொண்டிருப்பதின் நோக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்கிறான்

32வது ச்லோகத்தில், பகவான், போர்க்களத்தில் உள்ள அனைவரையும் கொல்லும் நோக்கத்தில் தான் இருப்பதாக விளக்குகிறான்.

33 மற்றும் 34வது ச்லோகங்களில், பகவான், அர்ஜுனனைப் போரிடவும், தனக்கு அனைவரையும் கொல்லும் ஒரு கருவியாக இருக்கவும் ஆணையிடுகிறான்.

35வது ச்லோகத்தில், அர்ஜுனன் மிகவும் பயந்து, பகவானை வணங்கி, நடுங்கும் குரலில் பேச ஆரம்பித்தான்.

36வது ச்லோகத்தில், அர்ஜுனன் மீண்டும் தேவதைகள் பகவானிடம் அதிக பக்தி கொண்டவர்களாக மாறுகிறார்கள் என்றும், தீயவர்கள் அவனைக் கண்டு அதிகமாக அஞ்சுகிறார்கள் என்றும் கூறுகிறான். இது முதல் பல ச்லோகங்களில் பகவானைப் போற்றுகிறான்.

41 மற்றும் 42வது ச்லோகங்களில், அர்ஜுனன் பகவானின் பெருமையை உணராமல், அவனை நண்பன், உறவினன் என அழைத்ததாகவும், சில சமயங்களில் அவனிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறுகிறான். ஆகையால், இதுபோன்ற செயல்களுக்காக அவன் மன்னிப்பு கேட்கிறான்.

ச்லோகம் 43

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு³ருர்க³ரீயான் |
ந த்வத்ஸமோ(அ)ஸ்த்யப்⁴யதி⁴க꞉ குதோ(அ)ன்யோ லோகத்ரயே(அ)ப்யப்ரதிமப்ரபா⁴வ ||

ஒப்பற்ற பெருமையை உடையவனே! அசையும் மற்றும் அசையாப் பொருள்களைக் கொண்ட இந்த உலகத்திற்கு நீயே தந்தை. (ஆகையால்) நீ மரியாதைக்குரியவன் மற்றும் நீ (தந்தையை விட அதிகம் மதிப்புடைய) மரியாதைக்குரிய ஆசார்யன்; மூன்று உலகங்களிலும் (கருணை போன்ற உன் குணங்களில்) உனக்கு இணையானவர்கள் யாரும் இல்லை; உன்னை விடப் பெரியவன் எப்படி இருக்க முடியும்?

ச்லோகம் 44

தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம் ப்ரஸாத³யே த்வாமஹமீஶமீட்³யம் |
பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு꞉ ப்ரிய꞉ ப்ரியாயார்ஹஸி தே³வ ஸோடு⁴ம் ||

முன்பு கூறிய காரணங்களால், அனைவரையும் கட்டுப்படுத்தி, அனைவராலும் போற்றப்படுகிற உன்னை நான், [அடக்கத்தின் காரணமாக] வளைந்த உடலுடன், தலையால் வணங்கி, உனது அருளை ப்ரார்த்திக்கிறேன். ஸர்வேச்வரனே! எனக்கு ப்ரியமானவனே, ஒரு தந்தை தன் மகனின் தவறுகளைக் கையாள்வது போலவும், நண்பனின் தவறுகளைக் கையாளும் நண்பனைப் போலவும், உனக்கு ப்ரியமான என்னுடைய தவறுகளை கருணையுடன் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: இந்த இரண்டு ச்லோகங்களையும் எம்பெருமானார் தனது சரணாகதி கத்யத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

45வது ச்லோகத்தில், அர்ஜுனன் விச்வரூபத்தைக் கண்ட தனது மகிழ்ச்சியையும் பயத்தையும் வெளிப்படுத்துகிறான்; மேலும் பகவானிடம் கருணை பொருந்திய வடிவத்தைக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறான்.

ச்லோகம் 46

கிரீடினம் க³தி³னம் சக்ரஹஸ்தம் இச்சா²மி த்வாம் த்³ரஷ்டுமஹம் ததை²வ |
தேனைவ ரூபேண சதுர்பு⁴ஜேன ஸஹஸ்ரபா³ஹோ ப⁴வ விஶ்வமூர்த்தே ||

கணக்கற்ற கைகளை உடையவனே! ப்ரபஞ்சம் முழுவதையும் உனது உடலாகக் கொண்டவனே! ஒரே ஒரு கிரீடத்தை அணிந்து, தண்டாயுதத்தை ஏந்தி, சக்கரத்தைக் கையில் ஏந்தியவனாக, உன்னை முன்பு போல் பார்க்க ஆசை; தயவு செய்து முன்பு போலவே நான்கு திருக்கைகளுடன் இருந்த தெய்வீக வடிவத்தைக் காட்டவும்.

குறிப்பு: அர்ஜுனன் நான்கு திருக்கைகள் கொண்ட தெய்வீக ரூபத்துடன் பகவானைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

47வது ச்லோகத்தில், அர்ஜுனன் ஒரு ப்ரியமான பக்தனாக இருந்ததால், அர்ஜுனனுக்கு விச்வரூபம் காட்டப்பட்டது என்று பகவான் விளக்குகிறான்.

48வது ச்லோகத்தில், பகவான் தனது விச்வரூபத்தை மற்றவர்கள் தங்கள் சுய முயற்சியால் பார்க்க முடியாது என்று கூறுகிறான்.

49வது ச்லோகத்தில், அவன் தனது உண்மை வடிவத்தைக் காட்ட ஒப்புக்கொள்கிறான்.

50வது ச்லோகத்தில், பகவான் தனது உண்மை வடிவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான் என்று ஸஞ்சயன் கூறுகிறான்.

51வது ச்லோகத்தில், அர்ஜுனன் பகவானின் உண்மை வடிவத்தைக் கண்டு த்ருப்தி அடைந்ததாகக் கூறுகிறான்.

ச்லோகம் 52

ஶ்ரீப⁴க³வானுவாச
ஸுது³ர்த³ர்ஶமித³ம் ரூபம் த்³ருʼஷ்டவானஸி யன்மம |
தே³வா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் த³ர்ஶனகாங்க்ஷிண꞉ ||

ஸ்ரீ பகவான் கூறினான் – நீ பார்த்த என்னுடைய இந்த ரூபத்தைப் பார்ப்பது யாருக்கும் மிகவும் கடினம். தேவர்களும் கூட எப்போதும் இந்த வடிவத்தைப் பார்க்க விரும்புகிறார்கள்.

53வது ச்லோகத்தில், சுயமுயற்சியால் அவனது வடிவத்தைக் காண முடியாது என்று மீண்டும் விளக்குகிறான்.

ச்லோகம் 54

ப⁴க்த்யா த்வனன்யயா ஶக்ய அஹமேவம் விதோ⁴(அ)ர்ஜுன |
ஜ்ஞாதும் த்³ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ||

எதிரிகளை துன்புறுத்தும் அர்ஜுனா! ஸ்வயம் ப்ரயோஜன பக்தி (தன்னலமற்ற பக்தி) மூலம் மட்டுமே உண்மையாக என்னை அறியவும், பார்க்கவும், அடையவும் முடியும்.

கடைசி ச்லோகத்தில், ஒருவன் எப்படி அவனை அடைகிறான் என்பதை பகவான் விளக்குகிறான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org