1.1 – தர்மக்ஷேத்ரே

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ச்லோகம் த்4ருதராஷ்ட்ர உவாச । த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: । மாமகா: பாண்ட³வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ॥ -1 பதவுரை ஸஞ்ஜய – ஸஞ்ஜயனே! த4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே – புண்ணிய பூமியான குருக்ஷேத்ரத்தில் யுயுத்ஸவ – போர் புரியும் ஆசையுடன் ஸமவேதா – ஒரு குழுவாகத் திரண்டிருக்கும் மாமகா: – என் பிள்ளைகளும் பாண்ட3வாஶ்சைவ – மற்றும் பாண்டுவின் புத்ரர்களும் கிமகுர்வத – … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் ஆளவந்தார் தம்முடைய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஐந்தாம் ச்லோகத்தில் முதல் அத்யாயத்தின் கருத்தை “தகாத உறவினர்களிடத்தில் பாசத்தினாலும் கருணையினாலும் செய்ய வேண்டிய தர்மமான யுத்தத்தில் செய்யக்கூடாது என்கிற அதர்மபுத்தியைப் பெற்று, அதனால் அர்ஜுனன் கலங்கி நின்றான். அவனை யுத்தம் செய்ய வைப்பதற்காக இந்த கீதா சாஸ்த்ரம் எம்பெருமானாலே தொடங்கப்பட்டது” என்று அருளிச்செய்கிறார். ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இரண்டு தன்மைகளை உடையவன் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – விஷயச் சுருக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் பூமிபாரத்தை நீக்குவதற்காகக் கண்ணனாக அவதரித்தான். பூமிபாரத்தை நீக்க அவன் செய்த செயல்களில் முக்கியமான ஒன்று மஹாபாரத யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தைத் தானே முன்னின்று ஏற்பாடு செய்து, சேனைகளின் வ்யூஹங்களை அமைத்து, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்து, அவனுக்கு ஒவ்வொரு ஸமயத்திலும் தக்க உதவிகளைப் பண்ணி அவனை ரக்ஷித்து, ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதமிட்டும் … Read more

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இதிஹாஸங்களில் ஒன்றான மஹாபாரதத்தின் முக்கியமான பகுதி ஸ்ரீ பகவத் கீதை. பூமியானது தீயோர்களாலே மிகவும் பாரத்தை அடைந்து இருக்க, ஸ்ரீமந்நாராயணன் த்வாபர யுகத்தின் இறுதியில் கண்ணன் எம்பெருமானாக அவதரித்து, ஸ்ரீ கீதையில் தானே அருளிச்செய்தபடி நல்லோர்களை ரக்ஷித்து, தீயோர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டினான். உபநிஷத்துக்களின் ஸாரமாக இருப்பதானால் ஸ்ரீ கீதையானது கீதோபநிஷத் என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கீதையின் பெருமைகளை பின்வரும் ச்லோகம் … Read more