ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 17 (ச்ரத்தாத்ரய விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 16

கீதார்த்த ஸங்க்ரஹம் இருபத்தொன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினேழாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினேழாம் அத்யாயத்தில், சாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத அனைத்து செயல்களும் அஸுரர்களுக்கு (ஆகையால் அவை பயனற்றது) என்றும் (கொடூரமான இயல்புடையவர்கள்) (இதனால் பயனற்றவை), சாஸ்த்ரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்கள் குணங்களின் அடிப்படையில் (ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) மூன்று வெவ்வேறு வழிகளில் உள்ளன என்று விளக்கப்பட்டுள்ளது. யாகம் போன்ற சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட செயல்களுக்கு. ‘ஓம் தத் ஸத்‘ என்பதைச் சொல்லி அடையாளப்படுத்தவேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

அர்ஜுன உவாச ।
யே ஶாஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஶ்ரத்³த⁴யான்விதா꞉ ।
தேஷாம் நிஷ்டா² து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம꞉ ॥

க்ருஷ்ணா! சாஸ்த்ர விதிகளை மதிக்காமல் நம்பிக்கையுடன் யாகம் செய்பவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? இது ஸத்வ குணத்தில் உள்ளதா, ரஜோ குணத்தில் உள்ளதா அல்லது தமோ குணத்தில் உள்ளதா?

2வது ச்லோகம் முதல் 4வது ச்லோகம் வரை, பகவான், சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட செயல்களின் விஷயத்திலேஒரு நபரின் ச்ரத்தை ஸாத்விகமாகவோ, ராஜஸமாகவோ அல்லது தாமஸமாகவோ இருக்கலாம் என்று விளக்குகிறான்.

ச்லோகம் 4

யஜந்தே ஸாத்விகா தே³வான்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா꞉ ।
ப்ரேதான்பூ⁴தக³ணாம்ஶ்சான்யே யஜந்தே தாமஸா ஜனா꞉ ॥

ஸத்வ குணம் அதிகமாக உள்ளவர்கள், அந்த நிலையில் ச்ரத்தை கொண்டவர்கள், தேவர்களை வணங்குகிறார்கள்; ரஜோ குணம் அதிகமாக உள்ளவர்கள், அந்த நிலையில் ச்ரத்தை கொண்டவர்கள்,யக்ஷர்கள் மற்றும் ராக்ஷஸர்கள் ஆகியவற்றை வணங்குகிறாலர்கள்; மேற்கூறிய இரண்டு வகை மக்களில் இருந்து வேறுபட்டவர்களான தமோ குணம்அதிகமாக உள்ளவர்கள், அந்த நிலையில் ச்ரத்தை கொண்டவர்கள், ப்ரேதங்களையும் பிசாசுகளையும் வணங்குகிறார்கள்.

ச்லோகம் 5 மற்றும் 6இல், சாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத செயல்கள், ச்ரத்தையுடன் செய்யப்பட்டாலும், அவை பயனற்றவை மட்டுமல்ல, ஆபத்துக்களையும் தரும் என்று விளக்குகிறான்.

ச்லோகம் 7

ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ⁴ ப⁴வதி ப்ரிய꞉ ।
யஜ்ஞஸ்தபஸ்ததா² தா³னம் தேஷாம் பே⁴த³மிமம் ஶ்ருணு ॥

அனைத்து உயிரினங்களுக்கும், உணவும் மூன்று வகைகளின் அடிப்படையில் (ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) பிரியமானது; யாகங்கள், தவங்கள் மற்றும் தானங்களும் அப்படியே; உணவு, யாகங்கள், தவங்கள் மற்றும் தானங்களில் உள்ள ஸத்வம் முதலான குணங்களின் அடிப்படையில் இருக்கும் மாறுபாடுகளை (என்னிடமிருந்து) கேள்.

ச்லோகங்கள் 8, 9 மற்றும் 10இல், ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்ஸின் இயல்புடைய உணவுப் பொருட்கள் விளக்கப்பட்டுள்ளன. ஸத்வ குணத்தில் உள்ள உணவுப் பொருட்கள் நிரந்தர நன்மைக்கும், ரஜோ குணம் துக்கத்துக்கும், வருத்தத்துக்கும், வ்யாதிக்கும், தமோ குணம் நிரந்தரமான பந்தம் மற்றும் துன்பத்துக்கும் வழிவகுக்கும்.

ச்லோகம் 11, 12 மற்றும் 13இல், ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்ஸின் இயல்பில் செய்யப்படும் யாகம் விளக்கப்படுகிறது. சாஸ்த்ரத்தின்படி ஸாத்விக யாகம், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, பகவானை வழிபடும் வகையில் செய்யப்படுகிறது; ராஜஸ யாகம் குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து, புகழ் பெறும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது; தாமஸ யாகம் ப்ராஹ்மணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், தர்மமற்ற வழியில் பெற்ற செல்வத்துடன், 1) முறையான மந்த்ரம் 2) தக்ஷிணை மற்றும் 3) ச்ரத்தை இல்லாமல் செய்யப்படுகிறது.

14வது ச்லோகம் முதல் 19வது ச்லோகம் வரை, தபஸ் (தவம்) விரிவாக விளக்கப்படுகிறது. அதில், ச்லோகங்கள் 14 முதல் 16 வரை காயிக (உடல்), வாசிக (பேச்சு) மற்றும் மானஸிக (மனம்) தவங்கள் விளக்கப்படுகின்றன. ச்லோகங்கள் 17 முதல் 19 வரை ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்ஸின் இயல்பில் செய்யப்படும் தவம் பற்றி விளக்கப்படுகிறது.

20வது ச்லோகம் முதல் 22வது ச்லோகம் வரை, ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்ஸின் இயல்பில் செய்யப்படும் தானம் விளக்கப்படுகிறது.

ச்லோகம் 23

ஓம்தத்ஸதி³தி நிர்தே³ஶோ ப்³ரஹ்மணஸ்த்ரிவித⁴꞉ ஸ்ம்ருத꞉ ।
ப்³ராஹ்மணாஸ்தேன வேதா³ஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதா꞉ புரா ॥

“ஓம் தத் ஸத்” என்ற மூன்று வார்த்தைகள் வைதிக கர்மங்களுடன் கூறப்படுகின்றன. அந்த மூன்று வார்த்தைகளுடன் சேர்ந்தவர்களான, வேதம் கற்கத் தகுதியுடையவர்கள் [ப்ராஹ்மணர், க்ஷத்ரியர் மற்றும் வைசியர்], வேதங்கள் மற்றும் யாகங்கள் ஆகிய அனைத்தும் படைப்பின் போது என்னால் உருவாக்கப்பட்டவை.

குறிப்பு: அடுத்த 4 ச்லோகங்களில், இந்த ச்லோகத்தில் விளக்கப்பட்டுள்ள கொள்கை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

24வது ஸ்லோகத்தில், எல்லா வைதிக கர்மங்களையும் முதலில் ப்ரணவம் சொல்லியே செய்ய வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.

25வது ச்லோகத்தில், அந்த த்ரைவர்ணிகர்கள் (ப்ராஹ்மணர்கள், க்ஷத்ரியர்கள் மற்றும் வைச்யர்கள்) மோக்ஷம், யாகம், தபஸ், தானம் போன்றவற்றைச் செய்து, வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், “தத்” என்பதைச் சொல்லிக்கொண்டே செய்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

26வது ச்லோகத்தில், “ஸத்” என்பது அனைத்து மங்களகரமான செயல்களுடனும் ஓதப்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது. அடுத்த ச்லோகத்திலும், “ஸத்” என்பதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

ச்லோகம் 28

அஶ்ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் தபஸ்தப்தம் க்ருʼதம் ச யத் ।
அஸதி³த்யுச்யதே பார்த்த² ந ச தத்ப்ரேத்ய நோ இஹ ॥

குந்தியின் மகனே! அந்த ஹோமம் (யாகம்), தானம் மற்றும் ச்ரத்தை இல்லாமல் செய்யப்படும் தவம் “அஸத்” என்று கூறப்படுகிறது; அது மோக்ஷம் அல்லது எந்த ஒரு இவ்வுலக நன்மைக்கும் வழிவகுக்காது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org