ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கீதார்த்த ஸங்க்ரஹம் பதினாறாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பன்னிரண்டாம் அத்யாயத்தின் கருத்தை, “பன்னிரண்டாம் அத்யாயத்தில், ஆத்ம உபாஸனத்துடன் ஒப்பிடும் போது பக்தி யோகத்தின் மேன்மை, அத்தகைய பக்தியை வளர்ப்பதற்கான வழிமுறைகள், அத்தகைய பக்தியில் ஈடுபட முடியாத ஒருவருக்கு ஆத்மானுபவத்தில் ஈடுபடுவது. கர்ம யோகத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான குணங்களின் வகைகள், மற்றும் பகவான் தன் பக்தர்களிடம் மிகுந்த பாசம் கொண்டவன் ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார்.
முக்கிய ச்லோகங்கள்
ச்லோகம் 1
அர்ஜுன உவாச .
ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே |
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக³வித்தமா꞉ ||
அர்ஜுனன் கேட்டான் – இரண்டு வகை மக்களில் யார் விரைவில் தங்கள் இலக்கை அடைவார்கள் – 1) முந்தைய ச்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி எப்போதும் உன்னுடன் ஒன்றாக இருக்க விரும்பி உன்னைப் பரிபூர்ணமாக வழிபடும் பக்தர்கள் மற்றும் 2) புலன்களால் அறிய முடியாத ஜீவாத்மாவை வணங்குபவர்கள்?
ச்லோகம் 2
ஶ்ரீப⁴க³வானுவாச .
மய்யாவேஶ்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே |
ஶ்ரத்³த⁴யா பரயோபேதா꞉ தே மே யுக்ததமா மதா꞉||
பகவான் கூறினான் – யார் என்னை (இலக்காக வைத்து) என் மீது மிகுந்த நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ, எப்போதும் என்னுடன் இருக்க விரும்புகிறார்களோ அவர்களே சிறந்த யோகிகளாக என்னால் கருதப்படுகிறார்கள்.
3வது மற்றும் 4வது ச்லோகங்களில், முழு அர்ப்பணிப்புடன் ஆத்மாவையே நினைப்பவர்கள் கூட முக்தியை [அதாவது கைவல்ய மோக்ஷம்] அடைகிறார்கள் என்று பகவான் கூறுகிறான்.
5வது ச்லோகத்தில், கைவல்ய மோக்ஷத்தை அடையப் பார்ப்பது பகவானை அடையப் பார்ப்பதை விடக் கடினமானது என்று கூறுகிறான்.
6வது மற்றும் 7வது ச்லோகங்களில், அவன் மீது முழு கவனம் செலுத்துபவர்களுக்கு விரைவில் அவனே நல்ல ரக்ஷகனாக இருப்பான் என்று கூறுகிறான்.
ச்லோகம் 8
மய்யேவ மன ஆத⁴த்ஸ்வ மயி பு³த்³தி⁴ம் நிவேஶய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்⁴வம் ந ஸம்ஶய꞉||
உன் மனதை என்னிடம் மட்டும் வைத்து, (இறுதி இலக்காக) என் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பாயாக; இந்தக் கொள்கையை ஏற்று / பின்பற்றினால், நீ என்னில் வாழ்வாய் என்பதில் ஸந்தேஹமில்லை.
குறிப்பு: இது முதல் நான்கு ச்லோகங்களில், அவன் மீது எப்படிப் பற்றுதலை வளர்த்துக் கொள்வது என்பதை விளக்குகிறான்.
ச்லோகம் 9
அத² சித்தம் ஸமாதா⁴தும் ந ஶக்னோஷி மயி ஸ்தி²ரம் |
அப்⁴யாஸயோகே³ன ததோ மாமிச்சா²ப்தும் த⁴னஞ்ஜய ||
அர்ஜுனா! உன் மனதை உறுதியாக என்னிடத்தில் நிலைநிறுத்த முடியவில்லை என்றால், அதன் காரணமாக, உன் எண்ணங்களை (அருமையான குணங்கள் கொண்ட என்னிடம்) மிகுந்த பக்தியுடன் பயிற்சி செய்து (மனம் என்னில் நிலைபெற்றபின்பு), நீ என்னை அடைய ஆசைப்படுவாய்.
ச்லோகம் 10
அப்⁴யாஸே(அ)ப்யஸமர்தோ²(அ)ஸி மத்கர்மபரமோ ப⁴வ |
மத³ர்த²மபி கர்மாணி குர்வன்ஸித்³தி⁴மவாப்ஸ்யஸி ||
உனது மனதை என்னிடத்தில் பயிற்றுவிக்கும் திறன் உனக்கு இல்லாவிட்டால், என் செயல்களில் மிகுந்த பக்தியுடன் ஈடுபடுவாயாக; இந்த முறையில் என் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் (விரைவில் தொடர் பயிற்சியின் மூலம் என் மீது உன் மனதில் உறுதியான பற்றுதலை வளர்த்துக் கொள்வதன் மூலம்) நீ என்னை அடைவாய்.
ச்லோகம் 11
அதை²தத³ப்யஶக்தோ(அ)ஸி கர்தும் மத்³யோக³மாஶ்ரித꞉ |
ஸர்வகர்மப²லத்யாக³ம் தத꞉ குரு யதாத்மவான் ||
இப்போது, என்னை நோக்கி பக்தி யோகத்தைப் பின்பற்றும் இந்தச் செயலை (பக்தி யோகத்தின் ஆரம்ப நிலை) உன்னால் செய்ய முடியாவிட்டால், கட்டுப்படுத்தப்பட்ட மனதுடன், அனைத்துச் செயல்களின் பலனையும் (ஞான யோகத்தில் ஈடுபட்டதன் ஒரு பகுதியாக) விட்டுவிடுவாயாக. இது பரபக்தியை (பகவானிடம் முழுப் பற்றுதலை) வளர்க்கும்.
ச்லோகம் 12
ஶ்ரேயோ ஹி ஜ்ஞானமப்⁴யாஸாஜ்ஜ்ஞானாத்³ த்⁴யானம் விஶிஷ்யதே |
த்⁴யானாத் கர்ம ப²ல த்யாக³ஸ் த்யாகா³ச்சா²ந்திரனந்தரம் ||
பகவானிடத்தில் (உண்மையான அன்பு இல்லாத) பக்தியை விட நேரடி தரிசனத்தை எளிதாக்கும் ஞானம் சிறந்தது; ஆத்மாவை அறிந்த (முழுமையற்ற) நிலையைக் காட்டிலும் சிறந்தது ஆத்மாவை அறிவதற்கான த்யானம்; (முழுமையற்ற) த்யானத்தை விடப் பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் கர்மம் சிறந்தது; பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் கர்ம யோகத்தில் ஈடுபடுவது மன அமைதியைக் கொடுக்கும்.
13வது முதல் 19வது ச்லோகம் வரை, பகவான் தனக்குப் பிடித்தமான அந்த கர்மயோக நிஷ்டர்களின் தன்மைகளை விளக்குகிறான்
ச்லோகம் 20
யே து த⁴ர்ம்யாம்ருʼதமித³ம் யதோ²க்தம் பர்யுபாஸதே |
ஶ்ரத்³த³தா⁴னா மத்பரமா ப⁴க்தாஸ்தே(அ)தீவ மே ப்ரியா꞉||
இந்த அத்யாயத்தின் இரண்டாம் ச்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, ப்ராபகம் (வழி) மற்றும் ப்ராப்யம் (இலக்கு) ஆகிய இந்த பக்தி யோகத்தை நன்கு கடைப்பிடிப்பவர்கள், நம்பிக்கையுள்ளவர்களாக, எப்போதும் என்னுடன் சேர்ந்தே இருக்க விரும்புபவர்கள், எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org