ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கீதார்த்த ஸங்க்ரஹம் ஆறாம் ச்லோகத்தில், ஆளவந்தார் இரண்டாம் அத்யாயத்தின் கருத்தை “நித்யமான ஆத்மா, தார்மிகமான கடமைகளைப் பற்றில்லாமல் செய்வது, ஸ்திதப்ரஜ்ஞ நிலையைக் குறிக்கோளாகக் கொள்வது, ஆத்மாவைப் பற்றிய ஞானம் மற்றும் கர்மயோகம்” ஆகிய விஷயங்களை அர்ஜுனனின் கலக்கத்தைப் போக்குவதற்காக இரண்டாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டது” என்று காட்டுகிறார்.
முக்கிய ச்லோகங்கள்
முதலில் சில ச்லோகங்களில் கண்ணன் அர்ஜுனனைக் கோழையாக இருப்பதைச் சொல்லிக் கண்டித்து, அவனுடைய கோழைத்தனத்தை விடச் சொல்கிறான். ஆனால் அர்ஜுனனோ அதே வாதங்களை கண்ணனிடத்தில் வைத்துத் தன்னுடைய குருக்களையும் உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை என்றான்.
ச்லோகம் 7
கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா: ।
யச்ச்²ரேய: ஸ்யாந்நிஶ்சிதம் ப்³ரூஹி தந்மே ஶிஷ்யஸ்தே’ஹம் ஶாதி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ॥
மனவலிமையின்மையால் என் தைரியம் அழிந்து, தர்மத்தில் குழம்பிய மனம் கொண்டவனாய் உன்னைக் கேட்கிறேன். நான் உனது சிஷ்யனாக ஆகிறேன். (எனக்கு) எது நல்லதோ அதை எனக்கு அறிவுறுத்து. உன்னிடம் சரணடைந்த என்னைத் தயவு செய்து திருத்து.
குறிப்பு: இங்கே அர்ஜுனன் க்ருஷ்ணனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டு, அவனிடம் சரணடைந்து அவனிடம் வழிகாட்டுதல் கேட்கிறான். அடுத்த சில ச்லோகங்களில், அர்ஜுனனின் முழு சரணாகதி விளக்கப்படுகிறது. இந்தப் பதினொன்றாவது ச்லோகம் தொடங்கிக் கண்ணன் கீதோபதேசத்தைச் செய்கிறான்.
ச்லோகம் 11
ஶ்ரீப⁴க³வாநுவாச ।
அஶோச்யாநந்வஶோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஶ்ச பா⁴ஷஸே|
க³தாஸூநக³தாஸூம்ஶ்ச நாநுஶோசந்தி பண்டி³தா: ॥
க்ருஷ்ணன் பேசினான் – கவலைப்படத் தகுதியற்றவர்களுக்காக நீ கவலைப்படுகிறாய்; நீ புத்திசாலித்தனத்தால் தோன்றியதைப் பேசுகிறாய்; புத்திசாலிகள் உயிர் இல்லாத உடல்களுக்காகவோ அல்லது உயிர் உள்ள ஆன்மாக்களுக்காகவோ கவலைப்பட மாட்டார்கள்.
குறிப்பு: முதலில், எதைப் பற்ற வேண்டும், எதைக் கைவிட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
ச்லோகம் 12
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா: ।
ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ॥
கடந்த காலத்தில் நான் (ஸர்வேச்வரன்), நீ (ஜீவாத்மா) மற்றும் இந்த மன்னர்களும் (ஜீவாத்மாக்கள்) இல்லாத காலம் இருந்ததில்லை. . எதிர்காலத்தில் நாம் அனைவரும் (நான், நீ மற்றும் இந்த மன்னர்கள்) இல்லாத ஒரு காலம் வராது.
குறிப்பு: க்ருஷ்ணன் அனைத்து ஆத்மாக்களின் நித்யத் தன்மையை நிறுவுகிறான், மேலும் தன்னையும் அர்ஜுனனையும் முறையே குருவாகவும் சீடனாகவும் வேறுபடுத்துகிறான்.
ச்லோகம் 13
தே³ஹிநோ’ஸ்மிந்யதா² தே³ஹே கௌமாரம் யௌவநம் ஜரா ।
ததா² தே³ஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ॥
இந்த உடலில் உள்ள ஆத்மா எப்படிக் குழந்தைப் பருவம், இளமை மற்றும் முதுமை ஆகியவற்றைக் கடந்து செல்கிறதோ, அதே வழியில், ஆத்மா மற்றொரு உடலை (இந்த உடலை விட்டுவிட்டால்) எடுக்கும். ஞானமுள்ளவன் இந்த ஆத்மாவின் இடப்பெயர்ச்சியைக் கண்டு மயக்கமடைவதில்லை.
குறிப்பு: இந்த ச்லோகம் தொடங்கி, பல ச்லோகங்களில், க்ருஷ்ணன், ஆத்மா நித்யமானது, உடல் தற்காலிகமானது, புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் போன்ற கொள்கைகளை விரிவாக விளக்குகிறான்.
ச்லோகம் 17
அவிநாஶி து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம் ।
விநாஶமவ்யயஸ்யாஸ்ய ந கஶ்சித்கர்துமர்ஹதி ॥
இந்த அசேதனப் பொருள்கள் அனைத்திலும் வ்யாபித்திருக்கும் ஆத்மா, அழியாதது என்பதை அறிந்து கொள். இந்த அழியாத ஆத்மாவை அழிப்பது என்பது எதனாலும் முடியாது.
ச்லோகம் 20
ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந் நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய: ।
அஜோ நித்ய: ஶாஶ்வதோ’யம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஶரீரே ॥
ஆத்மா ஒருபோதும் உருவாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை; இந்த ஆத்மா உண்டாக்கப்படவில்லை (ப்ரம்மாவின் நாள் கல்பத்தின் தொடக்கத்தில்) மற்றும் மீண்டும் (கல்பத்தின் முடிவில்) அழிக்கப்படுவான் என்பதல்ல; அவன் பிறக்காதவன், நித்யமானவன், மாறாதவன், பழமையானவன் மற்றும் எப்போதும் புதியவன்; இதனால் உடல் அழியும் போதும் இந்த ஆத்மா அழிவதில்லை.
ச்லோகம் 22
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோ’பராணி ।
ததா² ஶரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ॥
ஒரு மனிதன் எப்படி நைந்து போன ஆடைகளை துறந்து புதிய ஆடைகளை ஏற்றுக்கொள்கிறானோ, அதுபோல ஆத்மா (உடலில் வசிப்பவன்) அழிந்து போன உடலைக் கைவிட்டுப் புதிய உடலைப் பெறுகிறான்.
ச்லோகம் 26 மற்றும் 27 இல், க்ருஷ்ணன் கூறுகிறான், “ஆத்மாவை உண்டாக்கி அழிக்கப்பட்டதாக நீ கருதினாலும், நீ கவலைப்பட வேண்டாம், ஏனெனில் உண்டாக்கப்பட்டவை எப்படியும் ஒரு நாள் அழிந்துவிடும்”.
ச்லோகம் 31 இல், க்ருஷ்ணன் கூறுகிறான், “உன்னுடைய் க்ஷத்ரிய தர்மத்தின்படி, நீ இந்த போரில் ஈடுபட வேண்டும், பின்வாங்க முடியாது”. பின்னர் அவன் அர்ஜுனனை ஸமாதானப்படுத்த பல்வேறு காரணங்களைக் கூறி அவனைச் சண்டையிடும்படித் தூண்டுகிறான்.
ச்லோகம் 38
ஸுக²து:³கே² ஸமே க்ருʼத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ ।
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ॥
மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஸமமாகவும், விரும்பிய அம்சங்களின் ஆதாயம் மற்றும் இழப்பு (மகிழ்ச்சி மற்றும் துக்கத்திற்கான காரணம்) வெற்றி மற்றும் தோல்வி (ஆதாயம் மற்றும் இழப்புக்கான காரணம்) ஆகியவற்றை ஸமமாகக் கருது; பின்னர், (இந்தச் சிந்தனையுடன்) நீ போரில் ஈடுபட்டால், நீ துக்கங்களால் நிறைந்த ஸம்ஸாரத்தை அடைய மாட்டாய்.
39வது ச்லோகத்திலிருந்து, க்ருஷ்ணன் அர்ஜுனனுக்குக் கர்ம யோகத்தை விளக்கத் தொடங்குகிறான்.
ச்லோகம் 40
நேஹாபி⁴க்ரமநாஶோ’ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே ।
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ॥
இந்தக் கர்ம யோகத்தில், தொடங்கிய முயற்சிகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை. (தொடங்கிய பின் நிறுத்தினாலும்) குறை இல்லை; கர்ம யோகம் என்று பெயரிடப்பட்ட இந்த தர்மத்தில், சிறிய முயற்சி கூட ஸம்ஸாரம் பற்றிய பெரும் பயத்திலிருந்து பாதுகாக்கும்.
ச்லோகம் 45
த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந ।
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ॥
அர்ஜுனா! வேதங்கள் மூன்று குணங்களைக் (ஸத்வ, ரஜஸ், தமஸ்) கொண்டவர்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் நீ அந்த மூன்று குணங்களைக் கடந்து விடு. மேலும் இருமை (இன்பம்/துன்பம்) நோக்கிலிருந்து விடுபட்டு, அனுதினமும் விரிவடையும் நன்மையுடன் (ஞானத்துடன்) இருத்தல், பொருட்களைப் பெறுதல் (யோகம்) பெற்றவற்றைப் பாதுகாத்தல் (க்ஷேமம்) ஆகியவற்றைப் பற்றி வருந்தாமல். ஆத்மாவிலேயே மனதைச் செலுத்து
குறிப்பு: வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள தாழ்ந்த பலன்களைக் கொண்டவர்களை விளக்கும் அதே வேளையில், இந்த ச்லோகத்தில் வேதம் இந்தத் தாழ்ந்த பலன்களைக் காட்டுவதற்கான காரணத்தை க்ருஷ்ணன் விளக்குகிறான். மேலும் அடுத்த ச்லோகத்தில், புத்திசாலிகள் எப்படி உயர்ந்த பலன்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.
ச்லோகம் 46
யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே ।
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ॥
சிறிது நீரைப் பருக விரும்புமவனுக்கு, எல்லாப் பக்கங்களிலும் நீர் நிரம்பிய நீர்த்தேக்கத்திலிருந்து அந்தச் சின்ன அளவுதான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேபோல, புத்திசாலியான முமுக்ஷுவுக்கு (மோக்ஷத்தை விரும்புபவன்), வைதிகராக இருந்தாலும் [வேதங்களைப் பின்பற்றுபவன்], எல்லா வேதங்களிலும், தேவையானது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து தெரிவது வேதத்தின் அனைத்து பாகங்களும் முமுக்ஷக்களால் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல.
ச்லோகம் 47
கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந ।
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³’ஸ்த்வகர்மணி ॥
முமுக்ஷுவாக இருப்பதால், நீ உண்மையான நித்ய, நைமித்திக கர்மங்களை மட்டுமே விரும்ப முடியும்; ஸ்வர்கம் போன்ற தாழ்ந்த பலன்களை நீ ஒருபோதும் விரும்பக்கூடாது; மோக்ஷத்திற்கு வழிவகுக்கும் இத்தகைய கர்மங்களில் பற்றற்று இருப்பதில் நீ பற்றுதலைக் கொண்டிருக்க முடியாது.
அடுத்த பல ச்லோகங்களில், பற்றில்லாமல் ஞானிகள் எப்படிக் கர்மங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை க்ருஷ்ணன் விளக்குகிறான்.
ச்லோகம் 53
ஶ்ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஶ்சலா ।
ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ॥
என்னிடம் கேட்டபின் நன்கு அறிந்து, அசைக்க முடியாத உனது புத்தி உறுதியானால், அந்த நேரத்தில் நீ ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடைவாய்.
பிறகு, அர்ஜுனன் ஸ்திதப்ரஜ்ஞனைப் பற்றி அர்ஜுனன் கேட்கிறான். ச்லோகம் 55ல் இருந்து, க்ருஷ்ணன் ஸ்திதப்ரஜ்ஞனைப் பற்றி விளக்கத் தொடங்குகிறான்.
ச்லோகம் 55
ஶ்ரீப⁴க³வாநுவாச ।
ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த்த² மநோக³தாந் ।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ॥
ப்ருதையின் மகனே! ஒருவன் தனது ஆத்மாவின் மீது,அன்பாக இருந்து, மனதுடன் (ஆத்மாவின் மீது கவனம் செலுத்தி) , அனைத்து ஆசைகளையும் முழுவதுமாக விட்டுவிடும்போது, அந்த நேரத்தில், அவன் ஒரு ஸ்திதப்ரஜ்ஞனாக அறியப்படுகிறான்.
குறிப்பு: இந்த 55வது ச்லோகத்தில், வசீகார ஸம்ஜ்ஞையின் மிக உயர்ந்த நிலை விளக்கப்பட்டுள்ளது. 56வது ச்லோகத்தில், ஏகேந்த்ரிய ஸம்ஜ்ஞை என்று அதற்குக் கீழ்நிலை விளக்கப்பட்டுள்ளது. 57வது ச்லோகத்தில், வ்யதிரேக ஸம்ஜ்ஞை அதற்குக் கீழ்நிலை விளக்கப்பட்டுள்ளது. இறுதியாக, 58வது ச்லோகத்தில், யதமான ஸம்ஜ்ஞையின் மிகத் தாழ்ந்த நிலை விளக்கப்பட்டுள்ளது. இந்த நிலைகள் ஆத்மாவை நோக்கி மனதின் முன்னேற்றத்தைக்தைக் காட்டுகின்றன. பின்னர், பகவானின் தெய்வீக ரூபத்தின் மீது கவனம் செலுத்துவதும், அவ்வாறு செய்யாததன் விளைவும் விளக்கப்படுகிறது. இறுதியாக, 68வது ச்லோகத்தில், உலக இன்பத்திலிருந்து புலன்களை விலக்குபவர்களின் அறிவு அவர்கள் ஆத்மாவில் நிலைத்திருக்கும் என்பது காட்டப்பட்டது.
அத்தியாயத்தின் இறுதி ச்லோகங்களில், ஆத்ம ஸாக்ஷாத்காரத்தின் (தன்னை உணர்தலின்) மகத்துவம் மற்றும் அடைதல் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org