ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 10 (விபூதி விஸ்தர யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 9

கீதார்த்த ஸங்க்ரஹம் பதினான்காம் ச்லோகத்தில், ஆளவந்தார் பத்தாம் அத்யாயத்தின் கருத்தை, “பத்தாம் அத்தியாயத்தில், ஸாதன பக்தியை [பகவானை அடைவதற்கான வழிமுறையாக பக்தி யோகத்தை] உண்டாக்கவும் வளர்க்கவும், பகவானின் மங்கள குணங்களின் அளவற்ற தன்மையும், அவனே அனைத்தையும் கட்டுப்படுத்துபவன் என்பதைப்பற்றிய அறிவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச
பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ ஶ்ருணு மே பரமம் வச꞉ |
யத்தே(அ)ஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா ||

ஸ்ரீ பகவான் தொடர்ந்து பேசினான் – வலிமைமிக்க ஆயுதமேந்தியவனே! (என் மீது பக்தியைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான) உன் நல்வாழ்வுக்காக , நான் மீண்டும் (எனது பெருமைகளைக் கேட்டு) மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னிடம் இந்த (எனது பெருமைகளை விவரிக்கும்) உன்னதமான உபந்யாஸத்தைப் பேசுகிறேன். இதை நீ கவனமாகக் கேள்.

குறிப்பு: பகவானின் தெய்வீக வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால், பகவான் கருணையுடன் அவனுக்குத் தொடர்ந்து உயர்ந்த ஞானத்தை அளித்தான்.

2வது ச்லோகத்தில், பகவான் இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு விளக்கப் போகும் ஞானத்தின் பெருமையை விளக்குகிறான்.

ச்லோகம் 3

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஶ்வரம் |
அஸம்மூட⁴ஸ்ஸ மர்த்யேஷு ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ||

பிற மனிதர்களுக்கு இணையாக என்னை எண்ணி மயங்காமல், பிறப்பில்லாதவன் என்றும், அதுவும் அநாதி காலமாகப் பிறப்பில்லாதவன் என்றும், இவ்வுலகில் தேவர்களாகக் கருதப்படுபவர்களுக்கு தேவனாக இருப்பவன் என்றும் அறிபவன் (பக்தி வளர்வதற்குத் தடையாக இருக்கும்) அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்

குறிப்பு: பகவானின் உண்மைத் தன்மையை அறிந்தவனே பாவங்களிலிருந்து விடுபடுகிறான்.

4 மற்றும் 5வது ச்லோகங்களில், பல திறமைகள் (முரணான அம்சங்களும் கூட) அவனது விருப்பத்தால் பெறப்படுகின்றன என்று விளக்குகிறான்.

6வது ச்லோகத்தில், ஸப்த ரிஷிகள் போன்ற பெரிய முனிவர்களும் அவனுடைய விருப்பத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று விளக்குகிறான்.

7வது ச்லோகத்தில், தன் உண்மையான செல்வத்தைப் புரிந்துகொள்பவன், பக்தி யோகத்தில் நிலைத்திருப்பான் என்று விளக்குகிறான்.

ச்லோகம் 8

அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்தஸ்ஸர்வம் ப்ரவர்த்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமன்விதா꞉ ||

உலகம் முழுவதற்கும் நானே காரணமாக இருக்கிறேன், எல்லா வஸ்துக்களும் என்னிடமிருந்து மட்டுமே செயல்படுகின்றன. என்னுடைய இந்த இயற்கையான கணக்கற்ற செல்வத்தையும், மங்களகரமான குணங்களையும் த்யானித்து, ஞானிகள் என்னை மிகுந்த அன்புடன் வணங்குகிறார்கள்.

ச்லோகம் 9

மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த꞉ பரஸ்பரம் |
கத²யந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||

[எனது பக்தர்கள்] தங்கள் மனதை என் மீது நிலைநிறுத்தி, தங்கள் வாழ்க்கையை என்னில் மையமாக வைத்து, ஒருவருக்கொருவர் (அவர்கள் அனுபவித்த எனது குணங்களைப் பற்றி), எப்போதும் என்னைப் பற்றியும் எனது செயல்களைப் பற்றியும் பேசுவதால், பேசுபவர்களும் கேட்பவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ச்லோகம் 10

தேஷாம் ஸததயுக்தானாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம் |
த³தா³மி பு³த்³தி⁴யோக³ம் தம் யேன மாமுபயாந்தி தே ||

எப்பொழுதும் (என்னுடன்) ஒன்றாக இருக்க விரும்புபவர்கள் மற்றும் என்னிடம் (தன்னலமற்ற) பக்தியில் ஈடுபடுபவர்களுக்கு, என்னை அடையும் வழியான (பரஜ்ஞானம் எனப்படும்) புத்திசாலித்தனத்தை நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு வழங்குகிறேன்.

ச்லோகம் 11

தேஷாமேவானுகம்பார்த்த²மஹமஜ்ஞானஜம் தம꞉ |
நாஶயாம்யாத்மபா⁴வஸ்தோ² ஜ்ஞாநதீ³பேன பா⁴ஸ்வதா ||

அந்தத் தன்னலமற்ற பக்தி யோக நிஷ்டர்களுக்கு, அவர்களின் இதயத்திற்கு நான் இலக்காக இருப்பதால், எனது கருணையால் மட்டுமே, பழங்காலத்திலிருந்தே வரும் பாவங்களால் அறிவுக்குத் தடையாக இருக்கும் இருள் என்னும் அறியாமையை, என்னைப் பற்றிய அறிவு என்னும் விளக்கைக்கொண்டு அழிக்கிறேன்.

குறிப்பு: இந்த 3 ச்லோகங்களில், பகவானின் அருளால் பக்தியின் மேல்நோக்கிய முன்னேற்றம் காட்டப்பட்டுள்ளது.

அடுத்த 7 ச்லோகங்களில், அர்ஜுனன் பகவானின் பெருமையைக் கண்டு ப்ரமித்து, அதைப் பற்றிய தனது புரிதலை வெளிப்படுத்தி, பகவானிடம், அவனது (குணங்கள் மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்துபவனாய் இருக்கும்) செல்வத்தைப் பற்றி மேலும் கூறுமாறு ரார்த்திக்கிறான்.

19வது ச்லோகத்தில், பகவான் அதைப் பற்றி பேச ஒப்புக்கொள்கிறான். மேலும் தன் செல்வத்திற்கு எல்லையே இல்லை என்று எச்சரிக்கிறான்.

ச்லோகம் 20

அஹமாத்மா கு³டா³கேஶ ஸர்வபூ⁴தாஶயஸ்தி²த꞉ |
அஹமாதி³ஶ்ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச ||

உறக்கத்தை வென்ற அர்ஜுனா! அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் நான் அந்தர்யாமியாக வசிக்கிறேன். எல்லா உயிரினங்களுக்கும் முதலில் நிகழும் படைப்புக்கும், நடுவில் நிகழும் ரக்ஷணத்துக்கும், இறுதியில் நிகழும் அழிவுக்கும் நானே காரணம்.

குறிப்பு: எல்லாமே தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முதலில் நிறுவுகிறான்.

21வது ச்லோகம் முதல் 40வது ச்லோகம் வரை, பகவான் ஓரொரு கூட்டத்தில் உள்ள சிறந்த அம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த அம்சத்தை உடைய வஸ்துவாகத் தன்னையே காட்டுகிறான்.

ச்லோகம் 41

யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஶ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
தத்ததே³வாவக³ச்ச² த்வம்ʼ மம தேஜோம்(அ)ஶஸம்ப⁴வம் ||

எந்த உயிரினம் பெருமைகளைக் கொண்டு இருக்கிறதோ, தன்னால் கட்டுப்படுத்தப்படுகிறதோ, எது ஒளி படைத்ததாக இருக்கிறதோ, எது சுப காரியங்களைத் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறதோ, அந்த உயிரினங்கள் எனது கட்டுப்படுத்தும் திறனின் ஒரு பகுதியிலிருந்து அதைப் பெற்றன என்பதை நீ அறிவாயாக.

ச்லோகம் 42

அத²வா ப³ஹுனைதேன கிம் ஜ்ஞாதேன தவார்ஜுன |
விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்னமேகாம்ஶேன ஸ்தி²தோ ஜக³த் ||

அர்ஜுனா! ஆனால் பலவிதமாக விளக்கப்படும் இந்த அறிவால் உனக்கு என்ன பயன்? நான் இந்த உலகம் முழுவதையும் என் திறனின் ஒரு பகுதியாலே தாங்கி வருகிறேன்.

குறிப்பு: இறுதியாக, தனது திறன் எல்லையற்றது என்றாலும், வார்த்தைகள் இவற்றை முழுமையாக வர்ணிக்க முடியாது என்று சொல்லி அவன் முடிக்கிறான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org