ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 15 (புராண புருஷோத்தம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 14

கீதார்த்த ஸங்க்ரஹம் பத்தொன்பதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினைந்தாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினைந்தாம் அத்யாயத்தில், புருஷோத்தமனான ஸ்ரீமந்நாராயனைப் பற்றிப் பேசப்பட்டது. அசித்துடன் கூடியிருக்கும் பத்த ஜீவாத்மா, ப்ராக்ருத சரீரத்தில் இருந்து முக்தியடைந்த முக்த ஜீவாத்மா ஆகியோரை விட அவன் சிறந்தவன். ஏனெனில் அவன் அவர்களிடத்திலிருந்து வேறுபட்டவன் மற்றும் அவர்களை வ்யாபித்திருப்பவன்; அவர்களைத் தாங்குபவன் மற்றும் அவர்களுக்குத் தலைவன்” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச ।
ஊர்த்⁴வமூலமத⁴ஶ்ஶாக²மஶ்வத்த²ம் ப்ராஹுரவ்யயம் ।
ச²ந்தா³ம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத³ ஸ வேத³வித் ॥

பகவான் பேசினான் – யார் ஒருவன் இந்த ஸம்ஸாரத்தை வேர் மேல் பக்கமாகவும் கிளைகள் கீழ் பக்கமாகவும் இருக்கும், மற்றும் வேத வாக்யங்களை இலைகளாகவும் உடைய ஒரு அழியாத ஆல மரமாக அறிகிறானோ, அவனே வேதத்தை அறிந்தவன்.

குறிப்பு: ஸம்ஸாரம் பகவானால் ஒரு ஆல மரமாக விவரிக்கப்படுகிறது.

2வது மற்றும் 3வது ச்லோகங்களில், ஸம்ஸாரம் என்ற அந்த மரம் பரவியுள்ளதை பகவான் மேலும் விளக்குகிறான்

3வது ச்லோகத்தின் 2வது பகுதியிலும், 4வது ஸ்லோகத்தின் முதல் பகுதியிலும், ஸம்ஸாரம் என்ற மரத்தை துண்டித்து நித்யமான நிலையை அடைவதற்கான முக்கிய ஆயுதமாக உலக விஷயங்களில் பற்றின்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

4வது ச்லோகத்தின் 2வது பகுதியில், நித்யமாக இருக்கும் பகவானிடம் சரணடைவதே அறியாமை முதலியவற்றை நீக்கும் வழி என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

5வது ச்லோகத்தில், முந்தைய ச்லோகத்தில் விளக்கப்பட்டதை விவரிக்கிறான்.

ச்லோகம் 6

ந தத்³பா⁴ஸயதே ஸூர்யோ ந ஶஶாங்கோ ந பாவக꞉ ।
யத்³க³த்வா ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம ॥

எந்த நிலையை அடைந்த பிறகு அங்கிருந்து ஸம்ஸாரத்துக்குத் திரும்புவது இல்லையோ, அந்த ஜீவாத்ம ஜோதியை ஸூர்யன் சந்திரன் மற்றும் அக்னி ஆகியவை ஒளிரச் செய்வதில்லை. அந்த உயர்ந்த ஜோதி என்னுடையது.

ச்லோகம் 7

மமைவாம்ஶோ ஜீவலோகே ஜீவபூ⁴த꞉ ஸனாதன꞉ ।
மன꞉ஷஷ்டா²னீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²னி கர்ஷதி ॥

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவாத்மாக்களில் ஒருவன் இவ்வுலகில் கட்டுப்பட்ட ஆத்மாவாய் இருந்து கொண்டு, இந்த கட்டுப்பட்ட ஆத்மாக்கள் வாழும் ஸம்ஸாரத்தில் இருந்து கொண்டு உடலில் இருக்கும் செவி, வாய், கண், மூக்கு, தோல் என்கிற ஞானேந்த்ரியங்களையும் ஆறாவது இந்த்ரியமான மனஸ்ஸையும் செயல் புரியச் செய்கிறான்.

8வது ச்லோகத்தில், ஜீவாத்மா தனது புலன்களை ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு எப்படிக் கொண்டு செல்கிறான் என்பது விளக்கப்பட்டுள்ளது.

9வது ச்லோகத்தில், எப்படி ஜீவாத்மா புலன்கள் மூலம் உலக விஷயங்களை அனுபவிக்கிறான் என்று விளக்கப்பட்டுள்ளது.

10வது மற்றும் 11வது ச்லோகங்களில், ஆத்மா தன்னைச் சுதந்திரமானவன் என்று கருதுவதுதான் இந்தத் துன்பங்களுக்குக் காரணம் என்றும் சில ஆத்மாக்கள் ஏன் ஆத்ம ஸ்வரூபத்தை உணருகிறார்கள், மற்றவர்கள் ஏன் உணரவில்லை என்பவற்றையும் க்ருஷ்ணன் விளக்குகிறான்.

12வது ச்லோகத்தில், ஒளிரும் பொருட்களின் ஒளி அனைத்தும் தன்னுடையது என்று எடுத்துக்காட்டுகிறான்.

13வது ச்லோகத்தில், அவன் பூமியை வ்யாபித்து, எல்லாவற்றையும் தாங்குகிறான், எல்லாவற்றுக்கும் ஊட்டச்சத்தை அளிக்கும் சந்திரனாக இருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டுகிறான்.

14வது ச்லோகத்தில், அவன் ஜாடராக்னியாக இருந்து கொண்டு இந்த உடலானது அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் ஜீரணிக்க உதவுகிறான் என்பது காட்டப்பட்டது.

ச்லோகம் 15

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த꞉ ஸ்ம்ருதிர்ஜ்ஞானமபோஹனஞ்ச ।
வேதை³ஶ்ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் ॥

நான் அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் ஆத்மாவாக நுழைந்து அங்கு வசிக்கிறேன்; நினைவு, எந்தவொரு பொருளையும் அடையாளம் காணும் அறிவு மற்றும் மறதியும் என்னிடமிருந்தே உருவாகின்றன; நானே எல்லாவேதங்களாலும் அறியப்படுபவன்; நானே வேதத்தின் பலன்களைக் கொடுப்பவன்; நானே வேதத்தை அறிந்தவன்.

ச்லோகம் 16

த்³வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஶ்சாக்ஷர ஏவ ச ।
க்ஷர꞉ ஸர்வாணி பூ⁴தானி கூடஸ்தோ²(அ)க்ஷர உச்யதே ॥

சாஸ்த்ரத்தில், இரண்டு வகையான ஆத்மாக்கள், அதாவது க்ஷர – பத்த ஜீவாத்மாக்கள் மற்றும் அக்ஷர – முக்த ஜீவாத்மாக்கள் ஆகிய இருவரும் நன்கு அறியப்பட்டவர்கள்; பிணைக்கப்பட்ட ஆத்மாக்கள் அனைவரும் க்ஷர புருஷன் என்று அறியப்படுகின்றனர். முக்தாத்மாக்கள் அக்ஷர புருஷன் என்று அறியப்படுகின்றனர்

ச்லோகம் 17

உத்தம꞉ புருஷஸ்த்வன்ய꞉ பரமாத்மேத்யுதா³ஹ்ருத꞉ ।
யோ லோகத்ரயமாவிஶ்ய பி³ப⁴ர்த்யவ்யய ஈஶ்வர꞉ ॥

ஆனால் எவனொருவன் அசித், பத்த ஜீவாத்மாக்கள் மற்றும் முக்தாத்மாக்கள் ஆகிய மூன்று வகையான வஸ்துக்களில் வ்யாபித்துத் தாங்குபவனோ, அழிவற்றவனோ மற்றும் கட்டுப்படுத்துபவனோ, (சாஸ்த்ரத்தில் இருந்து) பரமாத்மாவாக அறியப்பட்டவனோ, (இந்த காரணங்களால்)அவன்மிகவும் உயர்ந்தவன் மற்றும் (முன்பு விளக்கப்பட்ட க்ஷர மற்றும் அக்ஷர புருஷர்களில் இருந்து) வேறுபட்டவன்.

ச்லோகம் 18

யஸ்மாத்க்ஷரமதீதோ(அ)ஹமக்ஷராத³பி சோத்தம꞉ ।
அதோ(அ)ஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த꞉ புருஷோத்தம꞉ ॥

நான் க்ஷர புருஷர்களையும் அக்ஷர புருஷர்களையும் விடப் பெரியவனாக இருப்பதால், நான் ச்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் புருஷோத்தமன் என்று புகழப்படுகிறேன்.

19வது ச்லோகத்தில், அவனை உண்மையாக அறிந்தவர்களே அவனை அடையும் வழியை உண்மையாக அறிந்திருப்பதாகவும், எல்லா வழிகளிலும் அவருக்குத் தொண்டு செய்ததாகவும் கூறுகிறான்.

ச்லோகம் 20

இதி கு³ஹ்யதமம் ஶாஸ்த்ரமித³முக்தம் மயானக⁴ ।
ஏதத்³பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மான்ஸ்யாத்க்ருதக்ருத்யஶ்ச பா⁴ரத ॥

குற்றமற்றவனே! பரத குலத்தில் உதித்தவனே! இவ்வாறு, புருஷோத்தம வித்யா எனும் மிக ரஹஸ்யமான இந்த சாஸ்த்ரம், என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது. இதை அறிந்தால், ஒருவன் என்னை அடைவதற்கு உடைய ஞானத்தைப் பெற்று, என்னை அடைவதற்குத் தேவையான செயல்களையும் செய்தவனாக இருப்பான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org