ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கீதார்த்த ஸங்க்ரஹம் இருபதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினாறாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினாறாம் அத்யாயத்தில், மனிதர்களில் தேவ மற்றும் அஸுர என்ற பிரிவுகளை விளக்கிய பிறகு, அடைய வேண்டிய உண்மையைப் பற்றிய ஞானத்தை மற்றும் அவ்வழியைக் கைக்கொள்வதைப் பற்றியும் ஸ்தாபிப்பதற்காக ஆத்மாக்கள் சாஸ்த்ரத்துக்கு வசப்பட்டிருப்பதைப் பற்றிய உண்மை பேசப்படுகிறது” என்று காட்டுகிறார்.
முக்கிய ச்லோகங்கள்
ச்லோகம் 1
ஶ்ரீப⁴க³வானுவாச ।
அப⁴யம் ஸத்த்வஸம்ஶுத்³தி⁴ர்ஜ்ஞானயோக³வ்யவஸ்தி²தி꞉ ।
தா³னம் த³மஶ்ச யஜ்ஞஶ்ச ஸ்வாத்⁴யாயஸ்தப ஆர்ஜவம் ॥
அச்சமின்மை, இதயத்தில் தூய்மை, அசித்திலிருந்து வேறுபட்ட ஆத்மாவில் கவனம் செலுத்துதல் , நேர்மையாக ஸம்பாதித்த செல்வத்தை உயர்ந்தோர்க்கு தர்மம் செய்தல், சிற்றின்பங்களில் ஈடுபடாமல் மனதைக் கட்டுப்படுத்துதல், பகவதாராதனமாக பஞ்ச மஹா யாகம் போன்றவற்றில் ஈடுபடுதல். (எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்) வேதத்தைக் கற்பது, (ஏகாதசி விரதம் போன்ற) தவங்களில் ஈடுபடுவது மற்றும் மனம், வாக்கு மற்றும் செயல்கள் ஒரே நிலையில் இருப்பது …
குறிப்பு: முதல் 3 ஸ்லோகங்களில், தெய்வீக குணம் கொண்டவரின் குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.
ச்லோகம் 2
அஹிம்ஸா ஸத்யமக்ரோத⁴ஸ்த்யாக³꞉ ஶாந்திரபைஶுனம் ।
த³யா பூ⁴தேஷ்வலோலுப்த்வம் மார்த³வம் ஹ்ரீரசாபலம் ॥
… எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது, எல்லா உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்யும் உண்மையைப் பேசுவது, (மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்) கோபத்தைத் தவிர்ப்பது, (தனக்கு எந்த நன்மையும் செய்யாத அம்சங்களைக்) கைவிடுவது, சிற்றின்பங்களில் ஈடுபடாதிருக்கப் புலன்களைப் பழக்குவது, அவதூறுகளைத் தவிர்த்தல், பிற உயிரினங்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமல் இருப்பது, உலக விஷயங்களில் இருந்து விலகியிருத்தல், (உயர்ந்தவர்களால் எளிதில் அணுகலாம்படி) மென்மையாக இருத்தல், (தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளுக்கு) வெட்கப்படுதல், அடையக்கூடிய அம்சங்களைக் கூட விரும்பாமல் இருப்பது …
ச்லோகம் 3
தேஜ꞉ க்ஷமா த்⁴ருதி꞉ ஶௌசமத்³ரோஹோ நாதிமானிதா ।
ப⁴வந்தி ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதஸ்ய பா⁴ரத ॥
… (தீயவர்களால்) தோற்கடிக்கப்படாமல் இருப்பது, (தீங்கு செய்பவர்களிடம் கூட) பொறுமை காட்டுவது, (இக்கட்டான சூழ்நிலைகளில் கூட) உறுதியாக இருப்பது , சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் செயல்களில் ஈடுபடும்போது (மனம், வாக்கு மற்றும் உடல் ஆகியவற்றில்) தூய்மையோடிருப்பது , மற்றவர்களின் நல்ல செயல்களில் தலையிடாமல் இருப்பது, கர்வம் இல்லாமல் இருப்பது (ஆகிய குணங்கள்) தெய்வீகப் பிறப்பைக் கொண்டவர்களுக்கு இருக்கின்றன, பரத குலத்தில் உதித்தவனே!
ச்லோகம் 4
த³ம்போ⁴ த³ர்போ(அ)பி⁴மானஶ்ச க்ரோத⁴꞉ பாருஷ்யமேவ ச ।
அஜ்ஞானம் சாபி⁴ஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் ॥
குந்தியின் மகனே! அஸுரர்களின் செல்வம் (அதாவது, பகவானின் கட்டளைகளை மீறுதல்) உள்ளவர்களிடம், புகழைப் பெறுவதற்காக தர்மத்தைச் செய்வது, கர்வம், மிகுந்த அகந்தை, கோபம், கடுமை மற்றும் அறியாமை ஆகியவை உள்ளன.
குறிப்பு: இந்த ச்லோகத்தில், அசுர இயல்புகள் உள்ள நபரின் குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.
ச்லோகம் 5
தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா ।
மா ஶுச꞉ ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோ(அ)ஸி பாண்ட³வ ॥
தேவர்களின் செல்வம் (என் கட்டளைகளைப் பின்பற்றுவது) ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வழிவகுக்கிறது; அஸுரர்களின் செல்வம் (என் கட்டளைகளை மீறுவது) தாழ்ந்த நிலைகளை அடைவதற்கு வழிவகுக்கிறது. பாண்டுவின் மகனே! (“நான் அஸுரனாகப் பிறந்தேனா?” என்று நினைத்து) சோகப்பட வேண்டாம் ; தேவர்களின் செல்வத்தை நிறைவேற்றுவதற்காகப் பிறந்த நீ தேவனாகவே இருக்கிறாய்.
குறிப்பு: அர்ஜுனன் தன் இயல்பை ஸந்தேஹித்துக் கவலைப்பட்டபோது, அர்ஜுனன் தெய்வீக குணம் கொண்டவன் என்று பகவான் அவனது கவலையை நீக்கினான்.
கர்ம, ஞான மற்றும் பக்தி யோகங்களை விளக்குவதன் ஒரு பகுதியாக தெய்வீக குணங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளதால், 6வது ச்லோகத்திலிருந்து, அஸுர குணங்களின் விரிவான விளக்கத்தை பகவான் தருகிறான்.
இந்த ச்லோகங்களில், தர்மம், தெய்வம் மற்றும் தெய்வீக அம்சங்களைப் புறக்கணித்து, ஆண் மற்றும் பெண் உடல்களுக்கு இடையிலான உடல் ஈர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் அஸுரத்தனமான நபர்கள் விரிவாக விளக்கப்படுகிறார்கள். அவர்கள் உலக விஷயங்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுகிறார்கள், சிற்றின்பத்தை மட்டுமே குறிக்கோளாகக் கருதுகிறார்கள், அதற்காகத் தவறான வழிகளிலும் செல்வத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்களை ஸ்வதந்த்ரர்களாகவும், தாங்களே தங்கள் இலக்குகளை அடைபவர்களாகவும் கருதுகிறார்கள். இப்படி இருந்து கொண்டு, தங்கள் முயற்சியின் நடுவில் தோல்வியடைந்து, கடந்த காலத்தில் செய்த கர்மங்களால் நரகத்தில் விழுகின்றனர். அவர்கள் கர்வம் கொண்டவர்கள், தங்களை வலிமையானவர்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள்; மேலும் ஆசைகள், கோபம், பொறாமை போன்றவற்றை உடையவர்கள்.
ச்லோகம் 19
தானஹம் த்³விஷத꞉ க்ரூரான்ஸம்ஸாரேஷு நராத⁴மான் ।
க்ஷிபாம்யஜஸ்ரமஶுபா⁴னாஸுரீஷ்வேவ யோநிஷு ॥
(முன்பு விளக்கியபடி) என் மீது வெறுப்பு கொண்டவர்கள், க்ரூரமானவர்கள், மனிதர்களிடையே தாழ்ந்தவர், அமங்களாமானவர்கள், மிகவும் தாழ்ந்தவர்களான அவர்களை பிறவிகளில் (இதில் மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் ஏற்படும்) நான் தொடர்ந்து தள்ளுகிறேன். அதுவும் அஸுரப் பிறவிகளில் தள்ளுகிறேன்.
குறிப்பு: இந்த ச்லோகத்திலும் அடுத்த ச்லோகத்திலும், அஸுரத் தன்மை உடைய நபர்களுக்கு ஏற்படும் விளைவுகளை விளக்குகிறான்.
ச்லோகம் 20
ஆஸுரீம் யோனிமாபன்னா மூடா⁴ ஜன்மனி ஜன்மனி ।
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத⁴மாம் க³திம் ॥
குந்தியின் மகனே! இவர்கள், (முந்தைய ச்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி) அஸுரப் பிறவிகளை அடைந்து, அடுத்தடுத்த பிறவிகளில், என்னைப் பற்றிய தவறான புரிதலை வளர்த்துக்கொண்டு, என்னைப் பற்றிய உண்மையான அறிவை அடையாமல், அந்த [தாழ்ந்த] பிறவிகளை விடத் தாழ்ந்த நிலைகளை அடைகிறார்கள்.
21வது ச்லோகத்தில், ஆத்மாவை அழிக்கும் இந்த அஸுர குணத்துக்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.
22வது ச்லோகத்தில் அஸுர குணத்தைத் துறப்பவர்களுக்கான தொடர் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன.
ச்லோகம் 23
ய꞉ ஶாஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத꞉ ।
ந ஸ ஸித்³தி⁴மவாப்னோதி ந ஸுக²ம் ந பராம் க³திம் ॥
எனது வேதக் கட்டளைகளை உதறித் தள்ளிவிட்டு, தன் விருப்பப்படி செயல்படுபவன், அடுத்த பிறவியில் ஸ்வர்க்கத்தில் பிறப்பது போன்ற எந்த லக்ஷ்யத்தையும் அடைவதில்லை. இந்தப் பிறவியிலும் அவன் ஸுகத்தை அடைவதில்லை. (என்னை அடையும்) இறுதி இலக்கையும் அவர் அடைவதில்லை.
ச்லோகம் 24
தஸ்மாச்சா²ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி²தௌ ।
ஜ்ஞாத்வா ஶாஸ்த்ரவிதா⁴னோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ॥
ஆகவே, எதைப் பின்பற்ற வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பதை நீ தீர்மானிக்க வேதம் மட்டுமே ப்ரமாணம். எனவே, சாஸ்த்ரத்தில் விளக்கப்பட்டுள்ள கொள்கையையும் (அதாவது, பரனான பகவான்) மற்றும் அதை அடைவதற்கான வழிமுறையையும் உண்மையாக அறிந்து, இந்தக் கர்மபூமியில் [நற்செயல்களைச் செய்வதற்கு விதிக்கப்பட்ட ஸ்தலத்தில்] விதிக்கப்பட்ட செயல்களைச் செய்ய நீ தகுதி பெற்றுள்ளாய்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org