ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 5 (கர்ம ஸந்யாஸ யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 4

கீதார்த்த ஸங்க்ரஹம் ஒன்பதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஐந்தாம் அத்யாயத்தின் கருத்தை, “ கர்ம யோகத்தின் எளிதில் செய்யக்கூடிய தன்மை, குறிக்கோளை விரைவாக அடையும் தன்மை, அதன் அங்கங்கள் மற்றும் அனைத்துத் தூய ஆத்மாக்களையும் ஒரே அளவில் பார்க்கும் நிலை ஆகியவை ஐந்தாவது அத்தியாயத்தில் பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

அர்ஜுன உவாச 
ஸந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புர்யோக³ம் ச ஶம்ஸஸி |
யச்ச்²ரேய ஏதயோரேகம் தந்மே ப்³ரூஹி ஸுநிஶ்சிதம் ||

அர்ஜுனன் சொன்னான்;
க்ருஷ்ணா! நீ கர்ம யோகத்தைக் கைவிட்டு ஞான யோகத்தைச் செய்வது மற்றும் கர்ம யோகத்தின் மூலமாக ஆத்மாவை அடைவது ஆகிய வழிகளைப் பாராட்டுகிறாய். இந்த இரண்டில் சிறந்ததாக நீ கருதும் ஒன்றைப் பற்றி எனக்கு விளக்கவும்.

குறிப்பு: பகவான் வெவ்வேறு ஸமயங்களில் வெவ்வேறு உபாயங்களின் மகத்துவத்தைப் பற்றி பேசுகிறான். அர்ஜுனன் குழப்பமடைந்து அதற்குத் தெளிவான பதிலைக் கேட்கிறான்.

ச்லோகம் 2

ஶ்ரீப⁴க³வானுவாச |
ஸந்யாஸ꞉ கர்மயோக³ஶ்ச நி꞉ஶ்ரேயஸகராவுபௌ⁴ |
தயோஸ்து கர்மஸந்யாஸாத் கர்மயோகோ³ விஶிஷ்யதே ||

ஞான யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகிய இரண்டும் ஆத்மாவை அறிவதற்கான சிறந்த பலனைத் தரும். இருப்பினும், அந்த இரண்டில் (சில காரணங்களால்) ஞான யோகத்தைக் காட்டிலும் கர்ம யோகத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

குறிப்பு: கர்ம யோகத்தின் முக்கியத்துவம் இங்கே வலியுறுத்தப்படுகிறது.

ச்லோகம் 3

ஜ்ஞேய꞉ ஸ நித்யஸந்யாஸீ யோ ந த்³வேஷ்டி ந காங்க்ஷதி |
நிர்த்³வந்த்³வோ ஹி மஹாபா³ஹோ ஸுக²ம் ப³ந்தா⁴த்ப்ரமுச்யதே || –

ஓ வலிமைமிக்க தோள்களை உடையவனே! ஒருவன் உலக இன்பங்களில் விருப்பத்தை வைக்காமல், (அதைத் தடுப்பவர்களிடம்) வெறுப்பு இல்லாமலும், அதன் காரணமாக (ஸுகம்-துக்கம், உஷ்ணம்-குளிர்ச்சி போன்ற) இரட்டைகளைப் பொறுத்துக்கொண்டு, கர்ம யோகத்தைச் செய்கிறான் என்றால் அவன் ஞானத்தில் நிலைநிற்கிறான். அவன் மட்டுமே ஸம்ஸாரத்தின் கட்டுக்களில் இருந்து எளிதில் விடுபடுகிறான்.

குறிப்பு: கர்ம யோகத்தை எப்படிச் செய்வது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ச்லோகங்களில், கர்ம யோகம் மற்றும் ஞான யோகம் இரண்டும் ஒரே பலனைத் தருவதாகவும், ஞானி அவற்றை ஸமமாகப் பார்க்கிறான் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

6வது ச்லோகத்தில், கர்ம யோகத்தின் முக்கியத்துவம் மற்றும் எளிமைத் தன்மை விளக்கப்பட்டுள்ளது. அடுத்த ச்லோகத்தில், இந்த அம்சங்களுக்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு ச்லோகங்களில், அதாவது 8வது மற்றும் 9வது ச்லோகங்களில், கர்மயோகத்தில் நான் செய்கிறேன் என்ற எண்ணத்தை விடுவதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்ம யோகத்தின் ஆழமான அம்சங்களை விளக்குகிறான்.

ச்லோகம் 18

வித்³யாவிநயஸம்பன்னே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்தினி |
ஶுநி சைவ ஶ்வபாகே ச பண்டி³தா꞉ ஸமத³ர்ஶின꞉ ||

அறிவும் அடக்கமும் உள்ள ப்ராஹ்மணரிடமும் அவை இல்லாத ப்ராஹ்மணரிடமும் , பசுவிலும் யானையிலும், நாயிலும் மற்றும் நாயைக் கொன்று உண்ணும் சண்டாளரிடத்திலும் ஒரே வடிவ/இயல்பு கொண்ட ஆத்மாக்களை ஞானிகள் ஸமமாகப் பார்க்கிறார்கள்.

குறிப்பு: இங்கே, ஆத்ம ஸாக்ஷாத்காரம் (ஆத்மாவைக் காண்பது) நன்றாக விளக்கப்பட்டுள்ளது.

பிறகு, ஆத்மாவில் நோக்காக இருப்பவனின் இயல்பு விளக்கப்படுகிறது.

ச்லோகம் 29

போ⁴க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் |
ஸுஹ்ருத³ம் ஸர்வபூ⁴தானாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம் ருச்ச²தி ||

யாகங்கள் மற்றும் தவங்களை ஏற்றுக்கொள்பவன் என்றும் எல்லா உலகங்களுக்கும் பெரிய அதிபதியாகவும் எல்லா உயிரினங்களின் நண்பனாகவும் என்னை அறிந்த அத்தகைய கர்ம யோகி அமைதியை அடைகிறான்.

குறிப்பு: பகவான் அவனையே குறிக்கோளாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த அத்யாயத்தை முடிக்கிறான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org